search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரோ டூயட்"

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டூயட் 125 ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்கூட்டர் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #HERO


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டூயட் 125 ஸ்கூட்டர் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் மேஸ்ட்ரோ 125 மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்ட டூயட் 125 வடிவமைப்பு பார்க்க 110சிசி வேரியன்ட் போன்றே காட்சியளிக்கிறது. 

    எனினும் க்ரோம் கார்னிஷிங் செய்யப்பட்டு மாடலுக்கு பிரீமியம் தோற்றம் கிடைக்கிறது. புதிய டூயட் 125 மாடலின் அனலாக் ஸ்பீடோமீட்டர், சிறிய டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஓடோமீட்டர், ஃபியூயல் லெவல், ட்ரிப் மீட்டர் மற்றும் சர்வீஸ் டியூ இன்டிகேட்டர் உள்ளிட்டவற்றை காண்பிக்கிறது.

    ஹீரோ டூயட் 125 இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இது டூயட் 110 மாடலை விட சக்திவாய்ந்த வெர்ஷனாக இருக்கும். இதன் எடை 113 கிலோ மற்றும் அதிகபட்சம் 130 கிலோ பேலோடு திறன் கொண்டிரும் என கூறப்படுகிறது.



    புதிய டூயட் 125 மாடலில் 124.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, 4-ஸ்டிரோக் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹீரோ டூயட் 125 மாடலில் i3S ஐடிள் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும், இந்த இன்ஜின் 8.7 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கப்படலாம்.

    சஸ்பென்ஷன்களை பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் காயில்-போன்ற ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் பிரிவில் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக் இரண்டு சக்கரங்களிலும் வழங்கப்பட்டு, இன்டகிரேட் செய்யப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் புதிய டூயட் 125 மாடலின் விலை ரூ.58,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், வெளியாதும் இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125, சுசுகி அக்சஸ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #HERO
    ×